Wednesday, September 27, 2006

தீவிர வாதிக்குத் தூக்கு




04. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் குற்றவாளி : முகமது அப்சலுக்கு அக்., 20ல் துõக்கு தண்டனை

புதுடில்லி: கடந்த 2001ம் ஆண்டு பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதி முகமது அப்சலுக்கு, அடுத்த மாதம் 20ம் தேதி திகார் சிறையில் துõக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை, பாதுகாப்பு வீரர்கள் கடுமையாக போராடி முறியடித்தனர். இது தொடர்பாக, ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதிகள் முகமது அப்சல், சவுகத் உசேன், சவுகத்தின் மனைவி நவ்ஜோத் சாந்து மற்றும் டில்லி கல்லுõரி பேராசிரியர் கிலானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பொடா, ஆயுதங்கள் சட்டம், வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்களை குற்றவாளி என கீழ்கோர்ட் தீர்ப்பளித்தது. எனினும், கிலானி மற்றும் சவுகத்தின் மனைவி மீது நவ்ஜோத் சாந்து ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை டில்லி ஐகோர்ட் விடுவித்தது.

ஆனால், பார்லி., மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, போக்குவரத்து மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்த முகமது அப்சல் மற்றும் சவுகத் உசேனுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்தன. சவுகத் உசேனுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும், முகமது அப்சலுக்கு துõக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள், இந்த தண்டனையை ஏற்கனவே

இந்நிலையில், "அக்டோபர் 20ம் தேதி டில்லி திகார் மத்திய சிறையில் காலை 6 மணிக்கு முகமது அப்சல் துõக்கிலிடப்படுவார்' என, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரவீந்தர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்."பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பயங்கரவாதிகளுடன் அப்சல் கொண்டிருந்த தொடர்பு நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பார்லிமென்ட்டையே தாக்கும் அதிபயங்கர குற்றத்தில் ஈடுபட்டதால், அப்சலுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை விதிப்பது தான் சமுதாயத்தின் மனசாட்சியை திருப்தி படுத்தும் செயல்' என்று இவருக்கான தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் செய்தி

4 comments:

வஜ்ரா said...

எவ்வளவு கொடூரமான தீவிரவாதியாக இருந்தாலும் தூக்கு தண்டனையெல்லாம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி நான் ஒரு pacifist, அறிவு சீவி என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

ENNAR said...

வஜ்ரா நனறி
கடுமையான தண்டனைகள் இல்லை என்றால் தவறுகள் அதிகமாகம். சட்டம் இன்னமும் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்.

வஜ்ரா said...

என்னார்,

ஐயோ, நான் விளையாட்டாகச் சொன்னேன்...என் நிலை என்றுமே..இத்தகய கொடூரமான தீவிரவாதி, அதுவும் கடவுளின் பெயர் சொல்லிச் செய்பவர்களை இரண்டு முறை தூக்கு போடவேண்டும் என்பதே...

ஆனால் நம்மிடையே சில ஏட்டுச்சுறக்காய்கள் A/C ரூமில் உட்கார்ந்துகொண்டு என் முந்தய பதில் போல் சொல்வார்கள் என்பதைத் தான் அப்படிச் சொன்னேன்...

ENNAR said...

வஜ்ரா,
ஆ..கா..!!! நல்லாச் சொன்னீங்க போங்க.

[Valid RSS]