Sunday, October 15, 2006

நேரு கண்ணதாசன்

ஆசியாவின் ஜோதி மறைந்த போது கவியரசு உதிர்த்த கவிதை



சீரிய நெற்றி எங்கே

சிவந்தநல் இதழ்கள் எங்கே

கூரிய விழிகள் எங்கே

குறுநகை போன தெங்கே

நேரிய பார்வை எங்கே

நிமிர்ந்தநன் நடைதா னெங்கே?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரியவிட்டார்

தீயசொல் சொல்லா வாயைத்

தீயிலே கருகவிட்டார்!

வேறு


பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான்அழைத்துவிட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேங்க்கிளியைக் கலங்கவிட்டுத்

தாய்க்கிளிளைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்

சாவுவந்து சேராதோ!

சஞ்சலமே நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயே!

தீயே உனக்கொருநாள்

தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும்நாம்

தேம்பி அழ வையோமோ!

யாரிடத்துப் போயுரைப்போம்!

யார்மொழியல் அதைதிகொள்வோம்?

யார்துணையில் வாழ்ந்திருப்போம்?

யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த

வேதனே எம்மையும் நீ

ஊரோடு கொண்டுசென்றால்

உயிர்வாதை எம்கில்லையே...

நீரோடும் கண்களுக்கு

நம்மதியை பார்தருவார்?

நேருஇல்லா பாரதத்தை

நினைவில்யார் வைத்திருப்பார்?

ஐயையோ! காலமே!

ஆண்டவனே! எங்கள்துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்

கண்மூட வைத்தாயே

கண்கொடுத்த காவலனைக்

கண்மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா...

நேருவா மறைந்தார்; இல்லை!

நேர்மைக்குச் சாவே இல்லை!

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணம் இல்லை!

இருக்கின்றார் நேரு

இங்கேதான் இங்கேதான்

எம்முயிரில், இரத்தத்தில்,

இதயத்தில், நரம்புகளில்,

கண்ணில், செவியில்,

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை!

என்றும் அவர் பெயரை

எம்முடனெ வைத்திருப்போம்

அம்மா...அம்மா....அம்மா.....!














Wednesday, October 04, 2006

காமராஜர் பேச்சு

காமராஜர் சொல்கிறார்,"யார்மேலும் வெறுப்புணர்ச்சி உண்டாக்கக் கூடாது அரசியலில் நேர்மை வேண்டும், ஓழுக்கம் வேண்டும், கட்டுப்பாடு வேண்டும்...

காமராஜர் பேச்சு

Monday, October 02, 2006

சிவாஜி மக்கள் அரசியலுக்கு வர விருப்பம்

சிவாஜி மகன் ராம்குமார்

என் தந்தை சிவாஜி கலை உலகில் நிறைய சாதிச்சார். வீரபாண்டிய கட்ட பொம் மனை சிவாஜி வடிவில் பார்ப்பதாக பலர் பெருமைபட்டார்கள். அரசியலுக்கு வந்தும் மக்களுக்கு சேவை செய்தார்.

நாங்களும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளோம். யாரெல்லாமோ அரசியலுக்கு வருகிறார்கள். நாங்கள் ஏன் வரக்கூடாது. என் தம்பி பிரபுவை அரசியலில் இறக்கி விடுவேன். விரைவில் பிரபு அரசியலுக்கு வருவார். இது உறுதி. அவருக்கு நான் துணையாக இருப்பேன்.


தயவுசெய்து இவர்கள் தனிக்கட்சி ஆராம்பிக்காமல் ஏதேனும் ஒரு கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்யலாம் தந்தை ஆரம்பித்த அந்த கட்சியின் பெயரே எனக்கு மறந்து போச்சு தமிழ் முன்னேற்ற முன்னணி என நினைக்கிறேன். ஆனானபட்ட அவராலே முடியவில்லை வேண்டாம் தனிகட்சி .

மாலைமலர்

Sunday, October 01, 2006

கலைத்தாயின் மூத்தமகன் பிறந்த நாள்

அமெரிக்க அதிபவர் ஜான் கென்னடியால் அழைக்கப்பட்டவர்
2 மாதம் சுற்றுப்பயணம்
அமெரிக்காவில் 2 மாத காலம் சிவாஜி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அமெரிக்க அரசாங்கம் 2 கார்களையும், 2 செய லாளர்களையும் கொடுத்தது. ஒரு நாள் செலவுக்கு ("பாக்கெட் மணி") 160 டாலர் கொடுத்தது.அமெரிக்க நடிகர் - நடிகைகளை சந்திப்பதற்கும், ஸ்டூடியோக்களை பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்து இருந்தது. மார்லன் பிராண்டோவுடன் சந்திப்பு உலகின் தலைசிறந்த நடிகர் என்று புகழ் பெற்றிருந்தவர் மார்லன் பிராண்டோ. "ஜுலியஸ் சீசர்", "ஆன் தி வாட்டர் பிரண்ட்", "சயோனரா" முதலிய

படங்களில் நடித்தவர். "ஆன் தி வாட்டர் பிரண்ட்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆஸ்கார் பரிசு பெற்றவர்.


அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகைய மார்லன் பிராண்டோ, சிவாஜிகணேசனை வரவேற்று விருந்து கொடுத்தார். அப்போது, "அக்ளி அமெரிக்கன்" என்ற படத்தில் மார்லன் பிராண்டோ நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் நீண்ட நேரம் மார்லன் பிராண்டோ பேசிக் கொண்டிருந்தார்.


"இந்திய சினிமா படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சிவாஜி கேட்டார்.


"சத்யஜித்ரே எடுத்த படத்தைப் பார்த்தேன். கண்ணீர் வந்துவிட்டது" என்றார், பிராண்டோ.


"இந்திய கிராமங்களில் தெருக்களில் சாக்கடை ஓடுவது... அங்கு குழந்தைகள் விளையாடுவது... வறுமை காரணமாக நடக்கும் விபசாரம்... இத்தகைய காட்சிகள் வெகு இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தன. இதனால் அக்காட்சிகள் என் மனதைத் தொட்டு, கண்ணீர் வரச்செய்தன. சத்யஜித்ரே, அப்படத்தை சிறப்பாக எடுத்திருந்தார்" என்று கூறிய மார்லன் பிராண்டோ, இறுதியில் "அது நல்ல பொழுது போக்குப்படம்" என்று குறிப்பிட்டார்.

அதற்கு சிவாஜிகணேசன், "நீங்கள் பணக்காரர். அதனால் எங்கள் குழந்தைகள் சாக்கடையில்

விளையாடுவது, வறுமை காரணமாக விபசாரம் நடப்பது எல்லாம் உங்களுக்கு பொழுதுபோக்காக தோன்றுகிறது. சத்யஜித்ரே உங்களுக்காக இந்தப் படங்களை எடுக்கவில்லை. எங்களுடைய மக்களுக்காக எடுத்திருக்கிறார். எங்கள் மக்களில் பலர் ஏழைகள். அவர்கள் மாறவேண்டும், வறுமை ஒழியவேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக அந்த மாதிரி படங்களை எடுக்கிறார்" என்று கூறினார்.இதுபற்றி சிவாஜிகணேசன் பிறகு கூறும்போது, "நான் ஆங்கிலம் பேச பயப்படமாட்டேன். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளாசிவிட்டேன். மார்லன் பிராண்டோ

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். என் பேச்சுக்கிடையில் இரண்டு மூன்று முறை காபி

குடித்துவிட்டார்! என்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மார்லன் பிராண்டோவை சந்தித்தது மறக்கமுடியாதது" என்று குறிப்பிட்டார்.உலகப் புகழ் பெற்ற கவர்ச்சிக்கன்னி மர்லின் மன்றோவையும் சிவாஜி சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. காரில் நண்பர் வந்து சேருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிவாஜி உரிய நேரத்தில் போய்ச்சேர முடியவில்லை.


நயாகரா மேயர்


சிவாஜிகணேசன் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்றார். அவரை நயாகரா நகர மேயர் வரவேற்றார். அத்துடன் அவருக்கு ஒரு தங்கச்சாவியைக் கொடுத்து, "இன்று ஒரு நாள் நீங்கள்தான் இந்த நகரத்தின் மேயர். அதற்கு அடையாளம்தான் இந்த தங்கச்சாவி" என்றார்.

பிற நாடுகளில் இருந்து வருகிற மிக முக்கிய தலைவர் அல்லது பிரமுகர்களுக்குத்தான் இத்தகைய கவுரவம் நயாகரா நகரில் தரப்படுவது வழக்கம். சிவாஜிக்கு முன்னதாக இத்தகைய கவுரவத்தைப் பெற்ற இந்தியர் பிரதமர் நேரு மட்டுமே.


மலேசியா


அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், மலேசியாவுக்கு சிவாஜி சென்றார். அங்கு அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகிமானும், மலேசியத் தமிழர்களும் வரவேற்பு அளித்தனர். பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள தமிழர்களும் வரவேற்பு அளித்தனர்.சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை

நடிகர்-நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

[Valid RSS]