Wednesday, September 27, 2006

மனு யாரும் கொடுக்கவில்லை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கூத்தைப்பாரில் யாரும் உள்ளாட்சி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய வில்லை.

இந்த ஊரில் பல ஆண்டுகளாக கிராம கமிட்டியே கூடி உறுப்பினர்களை தேர்வு செய்வது வழக்கம் அதாவது ஒரு குடும்பத்தில் இம்முறை தேர்வு செய்தால் அடுத்தமுறை அவர்களுக்கு கிடையாது. இம்முறை முணையதிரியருக்கு கொடுத்தால் அடுத்த முறை தொண்டைமாருக்கு பிறகு கார்க்கொண்டார் இவ்வாறாக தேர்ந்தெடுப்பது வழக்கம் . இங்கு திருவெறும்பூர் சட்டமற்ற உறுப்பிணர் சேகரனும் (கார்க்கொண்டார்) இந்த ஊர்காரர்தான்.

இந்தாண்டு மட்டும் இதில் சிக்கல் வந்து விட்டதால் யாரையும் தேர்வு செய்யமுடியாமல் போய்விட்டது . ஆகவே யாரும் மனு செய்யவில்லை.
மேற்படி பேரூராட்சி தனித்தொகுதியாக ஒதுக்கப்பட்டது

3 comments:

நல்லவன் said...

இது தான் தேர்தல் கூத்து

மா.கலை அரசன் said...

அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் மக்களுக்கு முழு மனதோடு ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள பக்குவம் வரவில்லை என்றே நினைக்கின்றேன்.

ENNAR said...

நன்றி கலை
உண்மைதான் எதைச் செய்தாலும் திருப்தியில்லா நிலைதான் மக்களுக்கு
அந்த காலத்தில் குடிதண்ணீருக்கு சில பர்லாங் நடத்து சென்று தண்ணீர் எடுத்து வருவார்கள் ஆனால் இன்று தனது வீட்டு வாசலக்கு தண்ணீர் வரவில்லை என்று சாலைமறியல். அதுவும் உடனடியாக. சற்று பொருத்திருந்தால் தான் என்ன?

[Valid RSS]