Saturday, September 30, 2006

2 விமானங்கள் மோதல்


பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: 155 பயணிகள் கதி என்ன?

ரியோடி ஜெனிரோ, செப். 30-

பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 155 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது.

அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது.
மாலை மலர் செய்தி

155 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த விமானம் நொறுங்கிய விழுந்ததாப அல்லது வேறு எங்காவது தரை இறங்கியதாப அதில் இருந்த 155 பயணிகள் கதி என்னப என்பது தெரியவில்லை. விமானத்துக்கும் தரை கட்டுப் பாட்டு நிலையத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டது. இதை தொடர்ந்து அந்த விமானத்தை தேட விமானப்படை விமானங் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

2 comments:

மா.கலை அரசன் said...

வருத்தமான செய்தி. அந்த விமானங்களுக்கும் அந்த மக்களுக்கும் ஆபத்தின்றி ஆண்டவன் காத்தருள்வானாக.

ENNAR said...

கலை நன்றி

[Valid RSS]