Monday, October 02, 2006

சிவாஜி மக்கள் அரசியலுக்கு வர விருப்பம்

சிவாஜி மகன் ராம்குமார்

என் தந்தை சிவாஜி கலை உலகில் நிறைய சாதிச்சார். வீரபாண்டிய கட்ட பொம் மனை சிவாஜி வடிவில் பார்ப்பதாக பலர் பெருமைபட்டார்கள். அரசியலுக்கு வந்தும் மக்களுக்கு சேவை செய்தார்.

நாங்களும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளோம். யாரெல்லாமோ அரசியலுக்கு வருகிறார்கள். நாங்கள் ஏன் வரக்கூடாது. என் தம்பி பிரபுவை அரசியலில் இறக்கி விடுவேன். விரைவில் பிரபு அரசியலுக்கு வருவார். இது உறுதி. அவருக்கு நான் துணையாக இருப்பேன்.


தயவுசெய்து இவர்கள் தனிக்கட்சி ஆராம்பிக்காமல் ஏதேனும் ஒரு கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்யலாம் தந்தை ஆரம்பித்த அந்த கட்சியின் பெயரே எனக்கு மறந்து போச்சு தமிழ் முன்னேற்ற முன்னணி என நினைக்கிறேன். ஆனானபட்ட அவராலே முடியவில்லை வேண்டாம் தனிகட்சி .

மாலைமலர்

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயோ!
யாராவது புத்தி சொல்லுங்கோ!!!!" சந்திரமுகியில வந்த காசைக் கரியாக்கப் போறாங்க??? ம் விதி யாரை விட்டது.என்னங்க? அப்படி என்ன சிக்கலில மாட்டி அரசியல் உதவியோட தப்பப் பார்க்கிறாங்க??? அந்த மன்னன் பேரை "றிப்பேர்" ஆக்காம இருக்கச் சொல்லுங்கோ!
யோகன் பாரிஸ்

ENNAR said...

ஏதோ ஆவேசத்தில் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் கட்சி ஆரம்பிப்பது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல? எத்தணையோபேர் ஆரம்பித்து எங்கு போனார்கள் என்று தெரியவில்லை எல்லாரும் MGR ஆக முடியாது.

ஜோ/Joe said...

ராம்குமாரும் பிரபுவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சினிமாவையும் அரசியலையும் பகுத்தறியும் முதிர்ச்சி பெற்றவர்கள் .என்னைப் போன்ற வெறித்தனமான சிவாஜி ரசிகர்கள் கூட நடிகர் திலகத்தை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை .நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதற்காக கண்மூடித்தனமாக அவர் மகனை ஆதரிக்கப் போவதில்லை .கோடானுகோடி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒரு நடிகனாக அவரை இன்றும் ரசித்து மகிழ்கிறோம் .அதை அரசியல் லாபத்துக்கு யாரும் பயன் படுத்த முடியாது .பிரபு தன் தந்தையின் பெயரை கெடுக்காமல் இருப்பது நல்லது.

ENNAR said...

ஜோ நன்றி,
நானும் அவரது ரசிகன் தான் அவரது நிகழ்சிகள் நடந்தால் அதை காண செல்வது வழக்கம் ஆனால் அவரது அரசியலை ஏற்றுக் கொண்டவனல்ல. காமராஜர் காலத்திலே சில வேலைகளைச் செய்தார் மதுரை மாடு திருச்சியல் ராஜீவ் காந்தி மாடு போன்றவற்றில் .அது எனக்குப் பிடிக்க வில்லை.

[Valid RSS]